Posts

Showing posts from February, 2020

100.ஜும்ஆவுடைய பாங்கை 12 முப்பதுக்கு கூறுவது சரியா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  100(ஷரீஅத் சட்டம் )01/03/20                ✍ஜவால் சூரியன் உச்சி சாய்வது 12:40 ஆக இருக்கும் நாட்களில் சில ஊர்களில் ஜும்ஆவின் பாங்கை  வழமைபோல் 12:30 சொல்கிறார்கள். பாங்கு சொல்லப்பட்ட உடன்           (12:40க்கு முன்பே) ஜும்ஆவின் முன் சுன்னத்தை மக்கள் தொழுக ஆரம்பித்து விடுகின்றனர். இது கூடுமா? விளக்கம் தேவை..           பதில்: உச்சி சாய்வதற்கு முன்         (நடு உச்சியில் இருக்கும்போது) லுஹரின் நேரமோ ஜும்ஆவின் நேரமோ ஆரம்பம் ஆகாது. பாங்கு என்பதே தொழுகையின் நேரம் வந்து விட்டதை தெரிவிப்பதற்கு தான்.எனவே சூரியன் உச்சி சாய்வதற்கு முன் பின் பாங்கு சொல்வது கூடாது. ஜவாலுக்கு முன்பாக பாங்கு கூறிவிட்டால், நேரம் வந்தபின் பாங்கை திரும்பக் கூறுவது அவசியம்.மேலும் சூரியன் உச்சி சாய்வதற்கு முன் உள்ள நேரம் மக்ரூஹான நேரமாக இருப்பதால் அந்நேரத்தில் சுன்னத் மற்றும் நபில் தொழுகை நிறைவேற்றுவது கூடாது.                 ...

✍99.ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -99(ஷரீஅத் சட்டம் )29/02/20                      ✍ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது கேட்கப்படும் துஆவிற்கு சப்தமிட்டு ஆமீன் கூறுவது பற்றிய மார்க்க சட்டம் என்ன ?                                                      பதில்: ஜும்ஆவின் இரண்டாவது குத்பாவின் போது சப்தமாக ஆமீன் கூறக்கூடாது. மார்க்க சட்ட மேதைகள் அப்படி சொல்வது தவறு என்று சொல்கிறார்கள். கைகளை உயர்த்துவது சப்தமிட்டு ஆமீன் கூறுவது தவறாகும்.                                                                                                          📚ரத்துல் மு...

✍98.ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -98(ஷரீஅத் சட்டம் )28/02/20                    ✍ஜும்ஆ தொழுகையின் போது இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கிய பின் தான் எல்லோரும் எழுந்து இருக்க வேண்டுமா?               பதில்:          இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கும் சமயம் எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். இமாம்குத்பாவை முடிக்கும் முன்னரோ அல்லது கடைசி வார்த்தையை சொல்லிக் கொண்டிருக்கும் போதோ எழுவது கூடாது.                                                                                                                                        📚துர்ருல் முக்தார் 1/5...

✍97.தொழுகை எல்லாம் முடித்துவிட்டு எழுந்து வரும்போது சற்று முன்னால் சென்று திரும்பி வருகிறார்கள் ஏன் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -97(ஷரீஅத் சட்டம் )27/02/20                   ✍தொழுகை எல்லாம் முடித்துவிட்டு எழுந்து வரும்போது சற்று முன்னால் சென்று திரும்பி வருகிறார்கள் ஏன் ?                            பதில்: தொழுது முடித்த பிறகு இப்படி முன்னால் சென்று திரும்பி வர வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. எல்லோரும் அப்படி செய்வதும் இல்லை. தொழும் இடத்திலிருந்து சட்டென்று திரும்பினால், பின்னால் தொழுது கொண்டிருப்பவர்களை மிதித்துவிடவோ, அவர்கள் மீது மோதி விடவோ வாய்ப்புண்டு என்பதால் சற்று முன்னால் போய் திரும்பி வரும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இதையே சிலர் ஏதோ கட்டாயம் போல் பாவித்து கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள்                                                            

✍96.தொழாமல் வெறுமனே சஜ்தாவில் விழுந்து துஆகேட்கலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -96(ஷரீஅத் சட்டம் )26/02/20                   ✍தொழாமல் வெறுமனே சஜ்தாவில் விழுந்து துஆகேட்கலாமா?                                                  பதில்:தொழுகை இன்றி வெறும் சஜ்தாவில் மட்டும் துஆ கேட்பது, அதையே வழக்கமாக்குவது மக்ரூஹ் ஆகும்.   மேலும் பர்ளு தொழுகையைத் தொடர்ந்து மக்களுக்கு முன்னிலையில் இப்படி செய்வது தவறாகும். ஏனெனில் பொதுமக்கள் இதை பார்த்து இவ்விதம் செய்வது கடமை என்று என்ன வாய்ப்புள்ளது.         வழமையாக இன்றி எப்போதாவது தனிமையில் சஜ்தாவில் துஆ கேட்பதற்கு இடம் பாடு உண்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாவில் நீண்டநேரம் இருப்பார்கள். அதிகம் ஸஜ்தா செய்வார்கள் என்று அறிவிக்கும்நபி மொழிகள் நஃபீல்  தொழுகையில் ஸஜ்தா பற்றியதாகும். எனவே நபிமொழியில் கூறப்பட்டுள்ள ததுஆக்களை தஹஜ்ஜுத் போன்ற நஃபில் தொழுகைகளில் ஓதலாம் .      ...

✍95.எங்கள் பள்ளியில் இமாம் இல்லாத போது ஒருவர் தொழுகை நடத்துகிறார்.பாத்திஹா சூரா கூட அவருக்கு சரியாக ஓத தெரியவில்லை. தவறுகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நன்கு ஓதத் தெரிந்தவர்கள் அவரை பின்பற்றி தொழலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -95(ஷரீஅத் சட்டம் )25/02/20                       ✍எங்கள் பள்ளியில் இமாம் இல்லாத போது ஒருவர் தொழுகை நடத்துகிறார்.பாத்திஹா சூரா கூட அவருக்கு சரியாக ஓத தெரியவில்லை. தவறுகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நன்கு ஓதத் தெரிந்தவர்கள் அவரை பின்பற்றி தொழலாமா?                          பதில்: குர்ஆனின் எழுத்துக்களை சரிவர உச்சரிக்கத் தெரியாதவர்கள் தொழ வைப்பது சரியாகாது. அர்த்தங்கள் மாறும் அளவுக்கு குர்ஆனை தவறாக ஓதி ஒருவர் தொழ வைக்க, சரியாக ஓதத் தெரிந்தவர்கள் பின்துயர்ந்து  தொழுதால் தொழுகை கூடாது. சரியாக ஒத தெரிந்தவரை இமாமாக ஆக்க வேண்டும். இல்லையெனில் தனித்து தொழ வேண்டும்.                                                                                ...

✍94.நாவிலிருந்து தவறான நிய்யத் (உதாரணமாக லுஹருக்கு பதில் அஸர் என்று )வெளியாகி விட்டால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -94(ஷரீஅத் சட்டம் )24/02/20                   ✍நாவிலிருந்து தவறான நிய்யத் (உதாரணமாக லுஹருக்கு பதில் அஸர் என்று )வெளியாகி விட்டால் அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:தொழுகை நிறைவேறிவிடும். உள்ளத்தில் என்ன நிய்யத் உள்ளதோ அதுதான் கவனிக்கப்படும் .                                                                                                                 📚பதாவா ரஹீமிய்யா4/303) .          .

✍93.அமர்ந்து தொழுபவர் எவ்வாறு ருகூஉ செய்ய வேண்டும் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -93(ஷரீஅத் சட்டம் )23/02/20.               ✍அமர்ந்து தொழுபவர் எவ்வாறு ருகூஉ செய்ய வேண்டும் ?                                                                              பதில்:தலை முழங்காலுக்கு நேராக வரும் அளவு குனிய வேண்டும். பின்பகுதியை தூக்க வேண்டியதில்லை .                                                                                                             📚பதாவா ரஹீமிய்யா4/299) .          

✍92.தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹ் என்பதற்கு பின் வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -92(ஷரீஅத் சட்டம் )22/02/20.               ✍தொழுகையின் ஸலாமில் வரஹ்மத்துல்லாஹ்  என்பதற்கு பின் வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்தினால் என்ன சட்டம் ?                                                  பதில்:வபரக்காத்துஹூ என்பதை அதிகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய சொல்லாகும் .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/299) .          

✍ 91.நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -91(ஷரீஅத் சட்டம் )21/02/20.                 ✍ நோயாளி ஸஜ்தா செய்வதற்கு உயரமான தலையணையை பயன்படுத்துவது கூடுமா ?                                                  பதில்:சைக்கினையாக எந்த அளவு குனிய முடியுமோ அந்த அளவு குனிவது அவசியமாகும். அதைவிட தலையணை உயரமாக இருந்தால் அப்போது தொழுகை கூடாது.                                                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா 4/299

✍ 90.குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவரை முஅத்தின் ஆக்கலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -90(ஷரீஅத் சட்டம் )20/02/20.                 ✍ குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவரை முஅத்தின்                         ஆக்கலாமா ?                                                  பதில்:குடும்பக்கட்டுப்பாடு செய்வது அல்லாஹ்வின் நிஃமத்தை மறுப்பதாகும். இந்தசெயல் ஹதீஸில் தடைசெய்யப்பட்ட ஹராமான செயல் ஆகும் .எனவே குறையுள்ள இந்த மனிதரை உயர்ந்த பணியான முஅத்த்தின் பணிக்கு நியமிப்பது மக்ரூஹ் ஆகும். ஆனால் ஏதேனும் ஒரு நேரத்தில் முஅத்தின் இல்லாவிட்டால் இவர் பாங்கு சொல்லலாம்.                                                                              ...

✍89.இமாம் பாங்கு கூறினால் இகாமத்தை யார் சொல்லவேண்டும். யாரேனும் சொன்னால் அதற்கு இமாமின் அனுமதி தேவையா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -89(ஷரீஅத் சட்டம் )19/02/20.                 ✍இமாம் பாங்கு கூறினால் இகாமத்தை யார் சொல்லவேண்டும். யாரேனும் சொன்னால் அதற்கு இமாமின் அனுமதி தேவையா?                                                                   பதில்:இமாம் பாங்கு சொன்னால் ஜமாஅத் ஆரம்பிக்கும் நேரத்தில் அவரே இகாமத் சொல்லி விட்டு தொழ வைக்கும் இடத்திற்கு செல்லலாம். அல்லது அவரது அனுமதியுடன் வேறு யாரேனும் இகாமத் சொல்லலாம். அனுமதியின்றி யாரேனும் சொல்ல அதனால் அவர் கோபம் அடைவார் என்று இருந்தால் அப்போது வேறொருவர் இகாமத் சொல்வது மக்ரூஹ் ஆகும்.                                                                        ...

✍ 88.ஃபஜர் தொழுகையின் பாங்கில் "அஸ்ஸலாத்து ஹைறும் மீனன் னவ்ம்" என்று சொல்ல மறந்து விட்டால் அந்த பாங்கு கூடுமா? மீண்டும் சொல்ல வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -88(ஷரீஅத் சட்டம் )18/02/20.                 ✍ ஃபஜர் தொழுகையின் பாங்கில் "அஸ்ஸலாத்து ஹைறும் மீனன் னவ்ம்"  என்று சொல்ல மறந்து விட்டால் அந்த பாங்கு கூடுமா? மீண்டும் சொல்ல வேண்டுமா?                                                          பதில்: பாங்கிற்கு இடையிலேயே நினைவு வந்து விட்டால் அப்போது அந்த விடுபட்ட வார்த்தையைக் கூறி அதில் இருந்து கடைசி வரை உள்ள பாங்கின் மீதி வாசகங்களையும் கூறி முடிக்க வேண்டும்.பாங்கு சொல்லி முடித்த பின் நினைவுக்கு வந்தால் அப்போது விடுபட்ட வார்த்தையிலிருந்து மீண்டும் பாங்கை கூறவேண்டும் .ஆனால் நீண்ட நேரம் கழிந்து விட்டால் அப்போது மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.                                                    ...

✍தொழுகையாளிகள் அதிகமாக இருந்தால் அப்போது எங்கே இகாமத் கூறவேண்டும். முதல் சஃப்பிலா அல்லது நடுவிலுள்ள சஃப்பிலா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -87(ஷரீஅத் சட்டம் )17/02/20.                 ✍தொழுகையாளிகள் அதிகமாக இருந்தால் அப்போது எங்கே இகாமத் கூறவேண்டும். முதல் சஃப்பிலா அல்லது நடுவிலுள்ள சஃப்பிலா?                                                  பதில்:தொழுகையாளிகள் குறைவாக இருந்து முதல் ஸஃப்பில் சொல்லப்படும்இகாமத் எல்லோருக்கும் கேட்கும் படியாக இருந்தால் அப்போது முதல் சஃப்பில் சொல்வது சிறந்தது. எல்லோருக்கும் கேட்காது என்று இருந்தால் அப்போது நடுவில் உள்ள எல்லோருக்கும் கேட்கும் படியான ஒரு சஃப்பில் சொல்வதில் தவறு ஏதும் இல்லை .                                                                                          ...

✍86. தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -86(ஷரீஅத் சட்டம் )15/02/20.                 ✍ தொழுகையாளிகள் பள்ளிக்குள் நின்றுகொண்டு இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?                                                  பதில்:நின்றுகொண்டு இகாமத் சொல்வது அல்லது இமாமை எதிர்பார்ப்பது மக்ரூஹ் ஆகும்.                                                                                                                                                  ...

✍85.டேப் ரிக்கார்டரில் மூலம் சொல்லப்படும் பாங்கு கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -85(ஷரீஅத் சட்டம் )14/02/20.                  ✍டேப் ரிக்கார்டரில் மூலம் சொல்லப்படும் பாங்கு கூடுமா ?                                                                  பதில்:கூடாது  .                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா4/296) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா    ...

✍84.முஅத்தின் எவ்வாறு இருக்க வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -84(ஷரீஅத் சட்டம் )13/02/20.                 ✍ முஅத்தின் எவ்வாறு இருக்க வேண்டும்?                                                  பதில: முஅத்தின் மார்க்கப்பற்றுள்ள வராக, நல்லவராக, மார்க்கச் சட்டங்களை அறிந்தவராக,குறிப்பாக பாங்கு தொழுகையின் சட்டங்கள், தொழுகையின் நேரங்கள் ,சுபுஹு சாதிக், உச்ச நேரம்,  ஒரு பொருளின் அசல் நிழல், அதன் ஒரு மடங்கு மிஸ்ல், அதன் இரு மடங்கு மிஸ்லைன்,செம் மேகம், வெண்மேகம் போன்றவைகளை அறிந்தவராகவும்,   உயர்ந்த சப்தம் இனிமையான குரல் பாங்கின் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க தெரிந்தவராக இருக்கவேண்டும் .                                                                            ...

✍ 83.வீட்டில் தனியாக தொழும் போது இகாமத் சொல்ல வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -83(ஷரீஅத் சட்டம் )12/02/20.                 ✍ வீட்டில் தனியாக தொழும் போது இகாமத் சொல்ல வேண்டுமா?                                                                               பதில்: சொல்வது நல்லது .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா3/16) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா     ...

✍82. பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -82(ஷரீஅத் சட்டம் )11/02/20.                 ✍ பல பள்ளிகளில் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?                                                  பதில்: முதலில் கேட்கும் பாங்குக்கு பதில் சொல்ல வேண்டும். மற்ற பாங்குகளுக்கு பதில் சொல்வதும் சிறப்பானது .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/289) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா     ...

✍81. பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -81(ஷரீஅத் சட்டம் )10/02/20.                ✍ பள்ளியில் மராமத்து பணி செய்யும் போது எங்கே பாங்கு சொல்ல வேண்டும் ?                                                  பதில: பள்ளிக்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு தகுதியான இடம் இருந்தால் அங்கே ஜமாஅத்துடன் தொழலாம். பாங்கும் அந்தந்த நேரங்களில் அவ்விடத்திலேயே சொல்லலாம் .                                                                                           📚பதாவா ரஹீமிய்யா3/15) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா          ...

✍80.தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -80(ஷரீஅத் சட்டம் )09-02-2020.                ✍தாடியை சிரைப்பவர் பாங்கு இகாமத் சொன்னால் அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:மார்க்கப்பற்றுள்ள வேறொருவர் இருக்கும்போது இவர் சொல்வது மக்ரூஹ் ஆகும் .                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/15) .          தொகுப்பு :                                   *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உல...

✍79.தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -79(ஷரீஅத் சட்டம் )08/02/20.                ✍தொழுகை நேரம் வருவதற்கு முன்பே பாங்கு சொல்லிவிட்டு நேரம் வந்தபின் தொழுதால் அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுதால் அது நிறைவேறி விடும். திரும்ப தொழ வேண்டியதில்லை. ஆனால் தொழுகை நேரத்திற்கு முன்னால் பாங்கு சொல்வது கூடாது.நேரம் வந்தவுடன் திரும்பச் சொல்ல வேண்டும் .                                                                                                                          ...

✍78.மஃரிபுடைய பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -78(ஷரீஅத் சட்டம் )07-02-2020.                ✍மஃரிபுடைய பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமா ?                                                                பதில்:ஆம் மூன்று சிறிய ஆயத்துக்களை ஓதும் அளவு இடைவெளி இருக்க வேண்டும் .                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/14) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                 S. அமானுல்லாஹ் அன்சார...

*இஷா தொழுகை*

இஷா தொழுகை    நம்மை படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நாம் நமது விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டோமா ! இவ்வுலகில் நாம் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அவ்வேளை நாம் சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி நம்மால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது. தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ! அல்லாஹ் சொல்கின்றான்... நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு...

✍77.முதல் ஸஃப்பில் வலுக்கட்டாயமாக இடம் பிடிப்பது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -77(ஷரீஅத் சட்டம் )06-02-2020.                ✍முதல் ஸஃப்பில் வலுக்கட்டாயமாக இடம் பிடிப்பது கூடுமா ?                                                  பதில:இச்செயல் மிகவும் வெறுக்கத்தக்கதாகும் .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/134) .          தொகுப்பு :                                 *மௌலவி ஹாஃபிழ்            ...

✍76.ருகூ விற்காக குனியும்போது தக்பீர் தஹ்ரீமா கூறினால் அதன் சட்டம் என்ன ? .

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -76(ஷரீஅத் சட்டம் )05-02-2020.                 ✍  ருகூ விற்காக குனியும்போது  தக்பீர் தஹ்ரீமா கூறினால்  அதன் சட்டம் என்ன ?                                                  பதில்:  தொழுகை கூடாது  .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/135) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்...

✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -75(ஷரீஅத் சட்டம் )04-02-2020.                 ✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா?                                                  பதில்: நான்கு ரகஅத்தை முழுமையாக்குவது  சிறந்ததாகும். இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பர்ளு தொழுகையில் சேர்ந்து கொண்டு தொழுகையை முடித்தபின் நான்கு ரக்அத் தொழுவது கூடும் .                                                                                                         📚ப...

✍ 74. நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -74(ஷரீஅத் சட்டம் )03-02-2020.                 ✍  நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன?                                                               பதில்:  தக்பீர் கூறும் அளவு நிற்பது போதுமானது.                                                                                                                        📚பதாவா ரஹீமிய்யா4/134) .          தொகுப்பு :    ...

✍73. ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -73(ஷரீஅத் சட்டம் )02-02-2020.                 ✍ ஜமாஅத் கிடைக்காவிட்டால் வீட்டில் மனைவியுடன் ஜமாஅத்தாக தொழலாமா? அல்லது தனியாக தொழலாமா ?                                                  பதில்:  ஜமாஅத்தாக தொழுவதே சிறந்ததாகும்  .                                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா3/40) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா    ...

✍72.ஸஜ்தா ஸஹ்வின் போது 2க்கு பதில் ஒரு சஜ்தா செய்தால் என்ன சட்டம் ?.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -72(ஷரீஅத் சட்டம் )01-02-2020.                                                                 ✍            ⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -72(ஷரீஅத் சட்டம் )01-02-2020.                                                           ✍ஸஜ்தா ஸஹ்வின் போது 2க்கு பதில் ஒரு சஜ்தா செய்தால் என்ன சட்டம்  ?.                                     பதில்: ஒரு ஸஜ்தா போதாது. எனவே தொழுகையை திரும்பத் தொழவேண்டும்                                        ...