Posts

Showing posts from March, 2020

✍131.நோன்பு உள்ள நிலையில் பெண்ணுக்கு ஹைளு வந்தால் என்ன சட்டம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -131(ஷரீஅத் சட்டம் )01/04/20              ✍நோன்பு உள்ள நிலையில் பெண்ணுக்கு ஹைளு வந்தால் என்ன சட்டம்?                                     பதில்:                                              அவளது நோன்பு தானாகவே முறிந்துவிடும். அப்பெண் ரமலானின் கண்ணியத்தை கருதி வெளிப்படையாக உண்பது, குடித்தலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது .                                                                                                                    ...

✍130.ரமளானில் இஃப்தார் செய்வதற்காக எவ்வளவு நேரம் பிற்படுத்தலாம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -130(ஷரீஅத் சட்டம் )31/03/20              ✍ரமளானில் இஃப்தார் செய்வதற்காக எவ்வளவு நேரம் பிற்படுத்தலாம்?                                        பதில்: ஐந்து- ஏழு நிமிடங்கள் தாமதப்படுத்த அனுமதியுள்ளது.                                                                                                                                                                📚பதாவா ரஹீமிய்யா 2/37) .          தொகுப்பு :  ...

✍129.பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -129(ஷரீஅத் சட்டம் )30/03/20              ✍பயணத்தில் தவறிப்போன நோன்புகளை களாச் செய்ய வேண்டுமா?                                  பதில்:ஆம்! களா செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் களாச் செய்வது அவசியம்.களா செய்யும் சந்தர்ப்பம் கிடைக்காவிடில் ஃபித்யா கொடுக்குமாறு வஸிய்யத் செய்ய வேண்டும். தனக்கு பின் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றால் இவ்வாறு வசிய்யத் செய்வது கூடும் .                                                                                                                                            ...

✍128.சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -128(ஷரீஅத் சட்டம் )29/03/20              ✍சுருமா போடுவதாலும், மருந்து தடவுவதால் நோன்பு முறியுமா?             பதில்:                                                           வாய், காது, மூக்கு, முன் பின் துவாரங்கள், வயிறு மற்றும் தலையின்  உட்காயத்தின்  துவாரம் வழியாக மருந்து இரைப்பை அல்லது மூளை வரை சென்று விட்டால் நோன்பு முறிந்துவிடும். கண்ணில் மருந்து இடுவதால், சுருமா போடுவதால் நோன்பு முறியாது .                                                                                                  ...

✍127.நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -127(ஷரீஅத் சட்டம் )28/03/20              ✍நோன்பு வைத்தவர் குழந்தைக்கு உணவை மென்று கொடுக்கலாமா?       பதில்:                                                மென்று கொடுக்காமல் குழந்தை சாப்பிடாது. வேறு மிருதுவான உணவும் இல்லை எனில், அப்போதும் மென்று கொடுப்பது மக்ரூஹ் அல்ல. தேவையின்றி மென்று கொடுத்தால் மக்ரூஹ் ஆகும்.                                                                                                                   📚பதாவா ரஹீமிய்யா 2/42) .          தொகுப்பு :  ...

✍126.நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -126(ஷரீஅத் சட்டம் )27/03/20              ✍நோன்பு வைத்துக்கொண்டு குளிக்கும்போது தொண்டைக்குள் தண்ணீர் செலுத்தி ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மேல் பகுதிக்குள் தண்ணீர் செலுத்துவதும் கூடுமா?                           பதில்:நோன்பாளி அவ்வாறு ஙர்ஙரா செய்வதும், மூக்கின் மிருதுவான பாகத்தில் தண்ணீர் செலுத்துவதும் அவசியம் இல்லை.                                                                                                                                                             ...

✍ பிறகு களா செய்யும் நிய்யத்துடன் கல்விக்காக ரமலான் நோன்பை விட்டு விடலாம்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -125(ஷரீஅத் சட்டம் )26/03/20              ✍ பிறகு களா செய்யும் நிய்யத்துடன் கல்விக்காக ரமலான் நோன்பை விட்டு விடலாம்?                                 பதில்: அனுமதி இல்லை .                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா 8/261) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S.அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்...

✍124.தமது தாய்மொழியில் நோன்பின் நிய்யத் செய்து கொள்ளலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -124(ஷரீஅத் சட்டம் )25/03/20              ✍ தமது தாய்மொழியில் நோன்பின் நிய்யத் செய்து கொள்ளலாமா?                      பதில்: நோன்பின் நிய்யத்தில் உள்ளத்தில் எண்ணுவதே போதுமானது. தாய்மொழி அல்லது அரபியில் கூறுவது சிறந்தது.                                                                                          📚பதாவா ரஹீமிய்யா 8/263) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -123(ஷரீஅத் சட்டம் )24/03/20              ✍ஸஹரின் கடைசி நேரத்தை அறிவிக்க சலாம் சொல்ல வேண்டுமா? அல்லது பாங்கு கூற வேண்டுமா?                                  பதில்:சலாம் கூறுவது பாங்கு கூறுவது சுன்னத்து அல்ல. மக்கள் தாங்களாகவே ஸஹர் நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும். எங்கேனும் நிர்ப்பந்தம் இருந்தால்... ஸஹரின் நேரம் முடிவதற்கு நெருங்கிவிட்டது என்று அறிவிப்பது போதுமானது.                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 3/106) .          தொகுப்பு...

✍122.ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -122(ஷரீஅத் சட்டம் )23/03/20              ✍ஐவேளை தொழுகையும், தராவீஹ் தொழுகையும் தொழும் ஒருவர் நோன்பு வைப்பது இல்லை. ஷரீஅத்தில் இவரின் சட்டம் என்ன?                      பதில்:            அவரின் தொழுகைகள் கபூல் ஆகிவிடும். எனினும் நோன்பு வைக்காததின் காரணமாக பெரும் குற்றம் ஏற்படும். அவர் ஃபாஸிக் ஆவார்.                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா 2/46) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா            ...

✍121.நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -121(ஷரீஅத் சட்டம் )22/03/20              ✍  நோன்பின் போது பல்லில் இருந்து ரத்தம் வெளியேறி தொண்டைக்குள் சென்று விட்டால் நோன்பை களாச் செய்வது கஃப்பாரா கொடுப்பதும் அவசியமா?                      பதில்: ரத்தம் குறைவாக இருந்து எச்சில் அதிகமாக இருந்தால் நோன்பு முறியாது. ஆனால் ரத்தத்தின் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறிந்துவிடும். அதேபோல் ரத்தம் எச்சிலை விட அதிகமாகவோ ,சமமாகவோ இருந்தாலும் நோன்பு முறிந்துவிடும். களா மட்டும் செய்வது வாஜிபாகும் .                                                                                                                          ...

✍ 120.நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -120(ஷரீஅத் சட்டம் )21/03/20              ✍ நோன்பு வைக்காமல் இருப்பதற்குரிய காரணங்கள் யாவை?                                                  பதில்: ஐந்து காரணங்கள் உள்ளன.     1.நோன்பு வைக்க முடியாத             அளவுக்க   வியாதி ஏற்ப ஏற்பட்டிருந்தால்                           2.நோன்பு வைப்பதால் தனக்கோ குழந்தைக்கோ உயிரின் மீது பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் பெண்கள் .                                             3.77  1/4 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பயணி                    ...

✍119. நோன்பு வைப்பதில் என்ன நலவுகள் உள்ளன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -119(ஷரீஅத் சட்டம் )20/03/20              ✍ நோன்பு வைப்பதில் என்ன நலவுகள் உள்ளன?                                பதில்:         தீமைகளை அதிகமாக ஏவும் நஃப்சை அதன் தூண்டுதல்களை தடுத்து விடுதல், பாவங்களை விடுதல்,          நோன்பாளியிடம் இறையச்சம் ஏற்படுதல், இறைவனின் தன்மைகளோடு நோன்பாளிகள் இணைந்து விடுதல்,நோன்பு வைப்பதன் மூலம் இறைவனின் கட்டளையை   செயல் படுத்துதல்.                                                                                        📚பதாவா ரஹீமிய்யா 3/105) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப...

✍118. ரமலானில் நோன்பு வைக்காமல் பகிரங்கமாக உண்பவர் குடிப்பவரின் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -118(ஷரீஅத் சட்டம் )19/03/20              ✍ ரமலானில் நோன்பு வைக்காமல் பகிரங்கமாக உண்பவர் குடிப்பவரின் சட்டம் என்ன?                                    பதில்:  அவர்  பாஸிக் ஆவார்.                                                                                                   📚பதாவா ரஹீமிய்யா 3/104) .          தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

✍117.நோன்பை விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டவர்கள் யார்?யார்?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -117(ஷரீஅத் சட்டம் )18/03/20              ✍நோன்பை விட்டுவிட சலுகை  அளிக்கப்பட்டவர்கள் யார்?யார்?                   பதில்: 1 .கஸ்ருடைய அளவு பயணம் செய்பவர்                           ‌          2. கர்ப்பஸ்திரீகள்            3.குழந்தைக்கு பாலூட்டுபவள்              4.நோன்பு பிடிக்க இயலாத அளவு வயோதிகர்                                                    5.கடும் நோய் உள்ளவர் ஆகிய நபர்களுக்கு நோன்பை விட்டு விடுவதற்கு சலுகை உள்ளது.                            இதில்  வயோதிகர் மற்றும் கடும் நோய் உள்ளவர்கள் இனி எப்போதும் நோன்ப...

✍116. ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன் பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -116(ஷரீஅத் சட்டம் )17/03/20              ✍ ஜும்ஆவில் குத்பா ஓதுவதற்கு முன்  பயான் நடைபெறுகிறது. இதைக் கேட்பது சிறந்ததா? அல்லது அந்த நேரத்தில் குர்ஆன் ஷரீப் ஓதுவது சிறந்ததா?                            பதில்: அறியாத மக்கள் பயானை கேட்டு அதன் மூலம் மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வது சிறந்ததாகும் .                                                                                                                        📚பதாவா ரஹீமிய்யா 3/58) .                    

✍115.ஈது மற்றும் ஜும்ஆவில் குத்பாவின் போது கையில் அஸா பிடிப்பது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -115(ஷரீஅத் சட்டம் )16/03/20              ✍ஈது மற்றும் ஜும்ஆவில் குத்பாவின் போது கையில் அஸா பிடிப்பது கூடுமா ?                                    பதில்:                              சுன்னத்து இன்னும் முஸ்தஹப்பாகும்.                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா 8/1         

✍114.ஜும்ஆ தொழுகையை ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிறைவேற்றுவது கூடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -114(ஷரீஅத் சட்டம் )15/03/20              ✍ஜும்ஆ தொழுகையை ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிறைவேற்றுவது கூடுமா ?          பதில்:தகுந்த காரணமின்றி தத்தமது பகுதிகளில் உள்ள சிறிய சிறிய பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடத்துவது ஷரீஅத்தின் அடிப்படை, இஸ்லாத்தின் மதிப்பு, அதன் நோக்கம் ஆகியவற்றுக்கு எதிரானதாகும். ஆனால் தகுந்த காரணம் ஏதும் இருந்தால் அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஜும்ஆ தொழுவதற்கு அனுமதி உண்டு.                                                                                                                                    📚பதாவா ரஹீமிய்யா 8/124) .     ...

✍ 113.பாங்கு குத்பாவின் போது மைக் (லௌட் ஸ்பீக்கர்) உபயோகிப்பது கூடுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -113(ஷரீஅத் சட்டம் )14/03/20              ✍ பாங்கு குத்பாவின் போது மைக் (லௌட் ஸ்பீக்கர்) உபயோகிப்பது கூடுமா?                                    பதில்:சப்தம் தூரம் வரை கேட்காது என்று இருப்பின் தாராளமாக மைக்கை பயன்படுத்தலாம் .                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா 8/167) .      

✍112.ஒரே பள்ளியில் இரண்டு தடவை ஜும்ஆ நடத்தலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -112(ஷரீஅத் சட்டம் )13/03/20              ✍ஒரே பள்ளியில் இரண்டு தடவை ஜும்ஆ நடத்தலாமா?          பதில்:இரண்டு தடவை ஜூம்ஆ நடத்துவதற்கு அனுமதி இல்லை.                                                                                    📚பதாவா ரஹீமிய்7/326) .                             

✍111.மார்க்க ரீதியான பயணியாக உள்ளவர் ஜும்ஆ தொழுது விட்டால் அவரின் பொறுப்பை விட்டும் லுஹர் நீங்கி விடுமா ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -111(ஷரீஅத் சட்டம் )12/03/20              ✍மார்க்க ரீதியான பயணியாக உள்ளவர் ஜும்ஆ தொழுது விட்டால் அவரின் பொறுப்பை விட்டும் லுஹர் நீங்கி விடுமா ?                பதில்:நீங்கிவிடும் .                                                                                                               📚பதாவா ரஹீமிய்யா 5/49) .          

✍110.ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -110(ஷரீஅத் சட்டம் )11/03/20              ✍ஜும்ஆவின் முதல் பாங்கிற்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி உள்ளதா? உடை மாற்றலாமா?          பதில்:           ஜும்ஆவிற்கு செல்வதில் தடை ஏற்படும்படியான காரியத்தில் அப்போது ஈடுபடுவது கூடாது. மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஜும்ஆ தொழுகையின் தயாரிப்பாக செய்யும் வேலைக்கு அனுமதியுள்ளது.                                                                                                                 📚பதாவா ரஹீமிய்யா 7/317) .          

✍109.ஜும்ஆ தொழுவதற்கு உச்ச நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -109(ஷரீஅத் சட்டம் )10/03/20              ✍ஜும்ஆ தொழுவதற்கு உச்ச நேரம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமா?                               பதில்:ஆம்! நிச்சயமாக உச்ச நேரத்திற்குப் பிறகுதான் ஜும்ஆவின் நேரம் ஆரம்பிக்கிறது.                                                                                                                     📚பதாவா ரஹீமிய்யா 7/313) .     

✍108.ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -108(ஷரீஅத் சட்டம் )09/03/20                         ✍ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்துக்கு பின் எப்போது பாங்கு சொல்ல வேண்டும் ?                           பதில்:ஜும்ஆ நாளன்று உச்ச நேரத்தில் இருந்து எட்டு பத்து நிமிடங்கள் இன்னும் பேணுதல் அடிப்படையில் 10 12 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்ல வேண்டும்.                                                                                  📚பதாவா ரஹீமிய்யா 7/307) .                                         

✍107.ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -107(ஷரீஅத் சட்டம் )08/03/20              ✍ஜும்ஆ நாளன்று குத்பா ஓதுபவருக்கு முன்னால் இரண்டாவது பாங்கு சொல்வதன் சட்டம் என்ன ?                        பதில்:பாங்கு சொல்பவர் மிம்பருக்கு முன்னால் அல்லது மிம்பருக்கு அருகில் நின்று பாங்கு சொல்ல வேண்டும். இந்த முறைதான் வழமையாய் கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறையாகும்.                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா 7/308) .          

✍106.முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -106(ஷரீஅத் சட்டம் )07/03/20              ✍முதல் பாங்கு கூறியபின் வியாபாரம் செய்யலாமா?               ஜும்ஆ தொழுகைக்குப் பின் சுன்னத் தொழுவதற்கு முன்னால் உலக அலுவல்களில் ஈடுபடலாமா ?         பதில்:ஜும்ஆவின் முதல் பங்கை கேட்டவுடனேயே வியாபாரத்தை விட்டுவிட்டு ஜும்ஆ குத்பாவிற்கு தயாராகி விடவேண்டும்.  உலக அலுவல்களில் ஈடுபட்டு சுன்னத் தொழுகையைப் பிற்படுத்துவது மக்ரூஹ் தன்ஜீஹ் ஆகும்.                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 5/76) .          .

✍105.தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன சட்டம் ?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -105(ஷரீஅத் சட்டம் )06/03/20              ✍தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி கிடைக்காவிட்டால் என்ன சட்டம் ?          பதில்:அப்படிப்பட்ட வேலையை விட்டுவிட வேண்டும். வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளவேண்டும். நல்ல வேலை கிடைக்கும் வரை அந்தத் தொழிற்சாலையில் ஜும்ஆ தொழுது கொள்ளலாம். ஆனால் பள்ளியில் தொழுத நன்மை கிடைக்காது. அங்கு ஜும்ஆ தொழஇமாம் அல்லாமல் மூன்று பேர் இருப்பது அவசியமாகும்.                                                                                                          📚பதாவா ரஹீமிய்யா 8/165) .        

✍104.ஜூம்ஆ தொழுகையை தொழ முடியாதவர்களின் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -104(ஷரீஅத் சட்டம் )05/03/20                       ✍  ஜூம்ஆ தொழுகையை தொழ முடியாதவர்களின் சட்டம் என்ன? பதில்:              ஜும்ஆ தொழாதவர்கள்  அதே பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழ முடியாது. அது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஜும்ஆ தொழுகை நடைபெறாத பள்ளிக்குச் சென்று முறைப்படி குத்பா ஓதி ஜும்ஆ தொழுகை தொழலாம்.அல்லது பள்ளி அல்லாத வேறு இடத்திலும் நிறைவேற்றலாம். ஆனால் லுஹர் தொழுவதாக இருந்தால் தனித் தனியாகத் தான் தொழ வேண்டும்.                                                                                                                       📚பதாவா ரஹீமிய்யா 5/27) ....

✍103.ஜும்மாவின் குத்பாவில் குத்பா ஓதியவுடன் இன்னல்லாஹ வமலாஇகத்திஹி.... என்ற ஆயத்தை ஓதும்போது மக்கள் ஸலவாத் ஓத வேண்டுமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா ?எது சிறந்த வழிமுறை?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -103(ஷரீஅத் சட்டம் )04/03/20                     ✍ஜும்மாவின் குத்பாவில் குத்பா ஓதியவுடன் இன்னல்லாஹ வமலாஇகத்திஹி.... நிச்சயமாக அல்லாஹ்வும் அவன் மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத்து கூறுகின்றனர் எனவே மீன்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்.என்ற ஆயத்தை ஓதும்போது மக்கள் ஸலவாத் ஓத வேண்டுமா? அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா ?எது சிறந்த வழிமுறை?              பதில்:அமைதியாக இருப்பதுதான் சிறந்தது ஆகும்.அல்லது மனதுக்குள் ஸலவாத் ஓதிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் சப்தமிட்டு ஸலவாத்து ஓதுவது கூடாது .                                                                                                          ...

✍102.ஜும்ஆ நாளன்று உச்சியின் நேரத்தில் நஃபில் தொழலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -102(ஷரீஅத் சட்டம் )03/03/20              ✍ஜும்ஆ நாளன்று உச்சியின் நேரத்தில் நஃபில் தொழலாமா? பதில்:                                                            மக்ரூஹ் ஆன தடுக்கப்பட்ட செயலாகும்.                                                                                                                                    📚பதாவா ரஹீமிய்யா 1/253) .         

✍101.ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -101(ஷரீஅத் சட்டம் )02/03/20              ✍ஜும்ஆ தொழுகையில் ஒருவர் கடைசி இருப்பில் சேர்ந்து கொண்டால் அவர் இரண்டு ரக்அத் தொழுவாரா? நான்கு ரக்அத் தொழுவார்களா?                               பதில்: ஜும்ஆவுடைய இரண்டு ரக்அத் தொழுவார். லுஹருடைய நான்கு ரக்அத் தொழ வேண்டிய அவசியமில்லை.                                                                                                                  📚பதாவா ரஹீமிய்யா 1/255) .