ராமர் கோயிலும், மக்தப் மத்ரஸாவும்
-----------------------------------+++ +++ அமெரிக்க எழுத்தாளர் ஜான் டேவி” ஒரு சமுதாயத்தின் மாற்றம் குழந்தையின் கல்வியின் மூலமே ஏற்படும்”என்று கூறுகிறார். ஆரோக்கியமான மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் தர முடியும். ஆரோக்கியமற்ற மாற்றத்தையும் குழந்தையின் கல்வியின் மூலம் தான் இன்றைக்கு நம் எதிரிகள் ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். 1992 டிசம்பர் 6 ம் தேதி பாபர் மஸ்ஜித் இடித்து தகர்க்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கான திட்டத்தின் விதையை 1925 லேயே தூவி விட்டார்கள்.ஆம் 1925 - ல் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாகியது. உருவானவுடன் இந்தியா முழுவதும் பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். கிட்டத்தட்ட 20,000 பள்ளிக் கூடங்களை தன் வசத்தில் வைத்திருந்தார்கள். பாடத் திட்டத்தில் இராமரை கடவுளாகக் கொண்டு வந்தார்கள். போதாக் குறைக்கு எல்லா டி.வி. சேனல்களிலும் இராமாயணம் என்ற நெடுந்தொடரை நாடகமாக்கி இந்த சமூகத்தைப் பார்க்க வைத்தார்கள். அதன் விளைவு, 75 ஆண்டு...