Nizam yousufi வரலாற்றுச் சிறப்பு மிக்க துல்கஃதா குர்ஆனில் சரித்திரமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்துடன் ஒரே சரித்திரமே கூட மீண்டும் மீண்டும் வேறு வேறு போங்கில் கூறப்படுகிறது. ஏனெனில் உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டு வரலாறும் உருவாக ஆரம்பித்தது. எனவே, வரலாற்றுக்கலை என்பது உலகில் முக்கியத்துவம் வாய்ந்த கலை. வரவலாற்றின் மூலம் மனித அறிவு வளர்ச்சியடைகிறது. மனிதனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக பல படிப்பினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது, சரித்திரம். ஷவ்வால், துல்கஃதா ஆகிய இரண்டு மாதங்களுக்கு மத்தியில் உள்ள மாதம் துல்கஃதா. ஆனால்,இந்த மாதம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. எனினும்,வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல இந்த மாதத்தில் நடந்துள்ளன. கஃபதுல்லாஹ்: ஹாஜிகள் கஃபதுல்லாஹ்வை நோக்கி லப்பைக் முழக்கத்துடன் விரைந்து செல்லும் காலமிது. ஆரம்பமாக ஆதம் (அலை) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். பிறகு நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சிதைந்துவிட்ட பிறகு நபி இபுறாகீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அதே இடத்தில் கஃபதுல்லாஹ்வைக் கட்டினார்கள். அவர்கள் ...