Posts

Showing posts from June, 2020

⚖207. தினம்ஒரு மஸ்அலா27/06/20

             ‌ *11.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                        ✍ஒரு ஆரோக்கியமான ஆடு உள்ளது. ஆனால் அதன் காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. எனவே அது சற்று நொண்டி நடந்து செல்கிறது. அதனை குர்பானி கொடுப்பது கூடுமா ?                                          ‌  பதில்:   நடக்கும்போது அந்த காலை பூமியின் மீது ஊன்றி நட...

⚖206.தினம்ஒரு மஸ்அலா26/06/20 ‌

         ‌ *10.குர்பானியின் சட்டம்.*                                      ‌                                                 ✍ஒரு பெண்ணின் மீது ஜகாத் கடமை. ஆனால் அவளது கணவர் அந்த ஜகாத்தை நிறைவேற்றுகிறார். இந்த பெண் மீது குர்பானி கடமையா?                                          ‌  பதில்:  ஆம்! கடமையாகும். அவள் தனது பொருளிலிருந்து தரவேண்டும். அல்லது அவள் அனுமதியுடன் கணவர் தரவேண்டும்.                                              📚ரத்துல் முக்தார் 9/330                  ‌ *தொகுப்ப...

⚖205.தினம்ஒரு மஸ்அலா25/06/20 ‌

      *9.குர்பானியின் சட்டம்*                                             ✍ குர்பானி கொடுக்கும்  பிராணியிருந்து பால் கறப்பதும், ரோமத்தை வெட்டுவதும்                  குர்பாணியை நிய்யத் செய்த நாளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதா? அல்லது குர்பானியின் நாட்களில் மட்டும் தடுக்கப்பட்டுள்ளதா?                                          ‌  பதில்:குர்பானிக்காக வாங்கிய பிராணி யிலிருந்து குர்பானி கொடுப்பதற்கு முன் பயன்பெறுவது மக்ரூஹ் ஆகும்.                              📚ரத்துல் முக்தார் 3/168                  ‌

⚖204.தினம்ஒரு மஸ்அலா24/06/20

             ‌                                                                        ‌ *8.குர்பானியின் சட்டம்*                                              ✍204.வசதியுள்ள ஒருவர் குர்பானிக்காக வாங்கிய பிராணி கர்ப்பம் ஆகி விட்டது. எனவே அதை வீட்டில் வைத்துக் கொண்டார். அதற்கு பதிலாக வேறு ஒரு பிராணியை வாங்கினார். முந்தைய பிராணியை விட இது 70 ரூபாய் குறைவு. இந்த 70 ரூபாயை ஸதகா செய்வது அவசியமா ?                             பதில்:   ஆம் rs.70 சதக்கா செய்துவிடவேண்டும்.                           📚ரத்துல் முக்தார் 6/168...

⚖203.தினம்ஒரு மஸ்அலா23/06/20

             *‌ 7. குர்பானியின் சட்டம்*                                                                    ‌                       ✍ஒரு பிராணிக்கு ஆறு வயது பூர்த்தி அடையும் போது முளைக்க வேண்டிய பல் முளைக்கவில்லை. அதை குர்பானி கொடுக்கலாமா?                    பதில்: குர்பானி கொடுப்பது கூடும்.                                                          📚ரத்துல் முக்தார் 3/187                  ‌.                            ...

202.தினம்ஒரு மஸ்அலா 22/06/20 ‌

⚖    *‌6.குர்பானியின் சட்டம்*                                               ✍காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுக்கலாமா ?                             பதில்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காயடிக்கப்பட்ட ஆட்டைக் குர்பானி கொடுத்துள்ளார்கள். எனவே அது கூடும் .                                                         📚ரத்துல்முக்தார்3/187‌‌.          ‌தொகுப்பு: மௌலவி ஹாஃபிழ் அமானுல்லாஹ் அன்சாரி          ஒட்டன்சத்திரம்.     ‌

⚖201.தினம்ஒரு மஸ்அலா 21/06/20 ‌

 *5.குர்பானியின் சட்டம்.*           ‌                                                                                        ✍பிறப்பிலேயே பிராணிக்கு கொம்பில்லை. காது இல்லை. வால் இல்லை எனில்... என்ன சட்டம்?                                          ‌  பதில்:  எந்த பிராணிக்கு பிறப்பிலேயே கொம்பு இல்லையோ அதனை குர்பானி கொடுப்பது கூடும். எந்த பிராணிக்கு பிறப்பிலேயே இரு காது அல்லது வால் இல்லையோ அதை கொடுப்பது கூடாது .                                                        📚ரத்துல் முக்தார் 3/18...

⚖ தினம்ஒரு மஸ்அலா 20/06/20

                   ‌                                                                        ‌                                                                   ✍200.பிராணியின் கொம்பு சிறிதளவு உடைந்துள்ளது. ஆனால் அதன் நுனி வெளியில் உள்ளது. அதை குர்பானி கொடுக்கலாமா ?                                          ‌                                 பதில்:    கொடுக்கலாம்.          ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 19/06/20

         ‌                                                                        ‌                                                                  ✍199.வால் துண்டிக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுக்கலாமா ?                                          ‌  பதில்:மூன்றில் ஒரு பகுதி அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டிக்கப்பட்டு இருந்தால் அதை குர்பானி கொடுப்பது கூடாது.                              📚ரத்துல் முக்தார் 3/182        ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 18/06/20

         ‌                                                                        ‌                                                                  ✍198.குர்பானிப் பிராணிகளின் வயது எவ்வளவு இருக்க வேண்டும் ?                                          ‌                         பதில்: ஒட்டகத்திற்கு ஐந்து வருடமும், பசு,மாடு ஆகியவற்றுக்கு இரண்டு வருடமும், ஆடு, செம்மறியாடு ஆகியவற்றுக்கு ஒரு வருடமும் பூர்த்தியாகி இருப்பது அவசியம். ஆனால் ஆறு மாத செம்மறி ஆடு ஒரு வருட...

⚖ தினம்ஒரு மஸ்அலா 17/06/20

              ‌                                                                        ‌                                                                   ✍197. குர்பானி யார் மீது கடமை யாகும்?                                          ‌        பதில்: எவரிடம் 7  1/2  தோலா தங்கம் அல்லது 52 1/2  தோலா வெள்ளி அல்லது வெள்ளியின் பணம் அடிப்படை தேவைகளை விட அதிகமாக உள்ளதோ அவரின் மீது குர்பானி கடமையாகும்.                      ...

⚖ தினம்ஒரு மஸ்அலா16/06/20

               ‌                                                                        ‌                                                                   ✍196. கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ருகூஃ,ஸஜ்தாவுக்காக கழுத்தை தாழ்த்தினால் கண்களில் தாங்க முடியாத வலி ஏற்படும். எனவே நான் எவ்வாறு இருக்கும் செய்ய வேண்டும்  ?                                         ‌  பதில்: நீங்கள் உட்கார்ந்து ருகூஃ,ஸஜ்தாவை சைக்கிணையாக நிறைவேற்றலாம். ருகூஃவுக்கு சைக்கினை செய்வதைவிட ஸஜ்தாவுக்கு செய்யும் சைக்க...

⚖ தினம்ஒரு மஸ்அலா 15/06/20

         ‌                                                                        ‌                                                                     ✍195. எல்லா நேரமும் சிறு நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் பெண்ணுக்கு ஷரீஅத்தின் சட்டம் என்ன ?                                         ‌          பதில்: அப்பெண் ஷரீஅத்தில் தங்கட வாளியாவாள். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் புதிதாக உளு செய்து ஆடையை மாற்றிக் கொண்டு தொழ வேண்டும்.                  ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 14/06/20

         ‌                                                                        ‌                                                                  ✍194.முதியவவர் ஒருவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது தொடைகளிலும் பட்டு விடுகிறது. அவரால் சரியாக உளு செய்யவும் முடிவதில்லை. யாராவது உதவி செய்தால் உளுச் செய்யமுடியும்.          5 வேளை  தொழுகைக்கும் உதவிக்கு ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே இவர் இந்நிலையில் தொழவேண்டுமா? தேவை இல்லையா? உளுச்செய்து தான் தொழ வேண்டுமா? அல்லது தயம்மும் செய்து தொழலாமா?                   ...

⚖ தினம்ஒரு மஸ்அலா13/06/20

                  ‌                                                                        ‌                                                                    ✍193. சிறு நீர் துளி வந்து கொண்டே இருக்கிறது எனில் அவர் தங்கடவாளியாவாரா?                                         ‌  பதில்: சிறுநீர் துளி தொழுகை நேரம் முழுவதும் வருவதில்லை. சுத்தமான நிலையில் தொழுகை நிறை  வேற்றுமளவு நேரம் கிடைக்கிறது எனில் அவர் தங்கடவாளியல்ல. சிறுநீர் துளி நிற்கும்வரை எதிர்பார்த்து நின்றவுடன் உளுச் செய்து தொழவேண்டு...

⚖ தினம்ஒரு மஸ்அலா11/06/20

                   ‌                                                                        ‌                                                                      ✍192. நடக்க முடியாமல் படுக்கையில் கிடக்கும் நோயாளி உடலும், உடையும் சுத்தமில்லாத நிலையில் அந்த அசுத்த நிலையிலேயே விரிப்பின்மீது தொழலாமா?ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தம் செய்வது அவருக்கு சிரமம். சிலவேளைகளில் சிறுநீர் சுத்தம் செய்ய முடியாது. சுத்தம் செய்துவிடுபவரும் இல்லாமல் போய் விடுகிறார். இந்நிலையில் என்ன சட்டம்?                                  ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 10/06/20

                   ‌                                                                        ‌                                                                    ✍190.ருகூஃ, ஸஜ்தா செய்தால் காற்று பிரிந்துவிடும் எனில் அமர்ந்து தொழுவது கூடுமா?                                         ‌  பதில்:  உட்கார்ந்து  ருகூஃ, ஸஜ்தா வை சைகை செய்து தொழவும்.ருகூஃ செய்யும் சைகையை விட ஸஜ்தாவுக்கு இன்னும் சற்று குனிந்து செய்யவும்.                   ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 09/06/20 ‌

      ‌                                                                   ✍189.நோயாளியின் தொழுகை களாவாகி விட்டால் என்ன சட்டம்?                                         ‌  பதில்:அந்த நோயாளி தலையை அசைத்து சைகை மூலம் கூட ருகூஃ ஸஜ்தா செய்ய முடியாவிட்டால் அவர் தொழவேண்டாம். ஐவேளையும் இதே நிலையில் இருந்து பிறகு குணமாகி விட்டால் களா செய்வது கடமையாகும். அதே நிலையில் மரணித்து விட்டால் களாவும் இல்லை. பரிகார தொழுகை (ஃபித்யா) தருமாறு வஸியத் செய்ய வேண்டியதும் இல்லை‌ ஐந்து நேர தொழுகையை விட அதிகமான நேரம் இவ்வாறு இருந்தால் அப்போது களாச் செய்வது கடமையில்லை. தொழுகைகள் மன்னிக்கப்பட்டுவிடும்.                                    ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 08/06/20

       ‌                                                                        ‌                                                                     ✍188.உட்கார்ந்து தொழுதால் தரையில் சஜ்தா செய்ய முடியாது என்ற நிலையில் முன்னுள்ள கட்டையில் ஸஜ்தா செய்யலாமா? அல்லது தரையில் சஜ்தா செய்யாமல் அமர்ந்து தொழலாமா? இரண்டில் எது சிறந்தது?                                         ‌     பதில்: நோயின் காரணமாக நின்று ருகூஃ சுஜூது செய்து தொழ முடியாமல் போய்விட்டால் அமர்ந்து தொழ வேண்டும். ருகூவு ஸஜ்தா விற்காக சைக்கினையாக ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 07/06/20

        ‌                                                                     ✍187.என்னால் நிற்க முடியும். ஆனால் உட்காரவும் எழவும் முடியாது. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழ வேண்டி உள்ளது. இது சரியா?                                         ‌  பதில்: ருகூஃ, சுஜூது செய்ய சக்தியற்றவராக இருந்து, வெறும் நிற்க மட்டுமே சக்தி இருப்பின் அவர் அமர்ந்து தொழ வேண்டும். ருகூஃ சுஜூதுகளை சைக்கினை மூலம் செய்ய வேண்டும். ருகூவைக்கான      சுஜூத்திற்க்கு சற்று அதிகம் குனிய வேண்டும்.                                                              ...

⚖ தினம்ஒருமஸ்அலா 06/05/20

           ‌                                                                        ‌                                                                 ✍186.முஅத்தினுக்கு காலில் வலி இருப்பதால் இருப்பின் போது வலது காலை விரித்து வைத்து அமர முடிவதில்லை. எனவே காலை பரப்பி வைத்து அமர்வதால் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இவர் தொழுவதற்கு சற்று விசாலமான இடம் தேவைப்படுவதால் இமாமுக்கு பின்னால்  தனி முஸல்லா விரித்து  தொழ விரும்புகிறார். அதனால் வரிசையில் நிற்பவர்கள் சேர்ந்து நிற்க முடியாது. ஆதலால் முஅத்தின் தனக்கென தனி முஸல்லா விரிப்பது கூடுமா?                  ...

⚖ தினம்ஒருமஸ்அலா 05/06/20 ‌

  ‌                                                                       ✍185.நோயாளி தனது வீட்டில் நின்று கொண்டு தொழ முடிகிறது. ஆனால் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிக்கு சென்றால் அப்போது நின்று தொழ முடிவதில்லை. உட்கார்ந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. இவரின் சட்டம் என்ன?                                         ‌                                பதில்: வீட்டிலேயே நின்று கொண்டு தொழ வேண்டும்.                                                                      ...

⚖ தினம்ஒரு மஸ்அலா 04/06/20

                  ‌                                                                    ✍184.நோயாளி ஃபர்ளு தொழுகையை எப்போது உட்கார்ந்து தொழலாம்?                                         ‌  பதில்: தக்பீர் தஹ்ரீமா கூறி எந்த அளவு நேரம் நின்று ஓத முடியுமோ அந்த அளவு கண்டிப்பாக நின்று தொழ வேண்டும். அதற்கு இயலாதவர் அல்லது நின்றுகொண்டு தொழுதால் வியாதி அதிகமாகி விடும் என்ற பயம் உள்ளவர் உட்கார்ந்து தொழுவதற்கு அனுமதி உண்டு. தலையணையை வைத்தாவது ஏதேனும் ஒருவிதத்தில் உட்கார முடிந்தால் அப்போது படுத்துக் கொண்டு தொழ அனுமதி இல்லை. பர்ளு , வாஜிப் மற்றும் ஃபஜ்ரின் முன் சுன்னத்திற்கும் இதே சட்டம் தான் .                         ...

⚖ தினம்ஒரு மஸ்அலா-03/06/20 ‌

   ✍183.நோயாளி பள்ளிக்கு வந்து அமர்ந்துகொண்டு ஜமாஅத்துடன் தொழுகிறார். இதன் சட்டம் என்ன?                                         ‌  பதில்: நிற்க முடியாதவர் அமர்ந்துகொண்டு தொழுவது  கூடும். நிற்க முடிந்தால் அப்போது அமர்ந்து தொழக்கூடாது. எந்த அளவுக்கு எனில் தக்பீர் தஹ்ரீமா சொல்லுமளவு தான் நிற்க முடியும் என்றாலும் கூட அதை நின்றுகொண்டு கூறி பிறகு உட்கார்ந்து கொள்ள வேண்டும். சில நோயாளிகள் சிறிது நேரம் நிற்க முடிந்தும் கூட அமர்ந்துகொண்டே தக்பீர் தஹ்ரீமா கூறுகிறார்கள். இது கூடாது.                                                                                                                  ...

⚖ தினம்ஒருமஸ்அலா 02/06/20 ‌

                                                            ‌                  ✍182.நின்றோ அமர்ந்தோ தொழும் போது ஒருவருக்கு சிறு நீர் வடிகிறது. ஒருக்களித்துப் படுக்கும் போது இவ்வாறு ஏற்படுவதில்லை. இவர் எப்படி தொழ வேண்டும்?                                         ‌  பதில்:நின்று கொண்டு தொழ வேண்டும். படுத்துக்கொண்டு சைக்கிணையாக தொழுவதற்கு அனுமதி இல்லை.                                                                                                  ...