100.ஜும்ஆவுடைய பாங்கை 12 முப்பதுக்கு கூறுவது சரியா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  100(ஷரீஅத் சட்டம் )01/03/20                ✍ஜவால் சூரியன் உச்சி சாய்வது 12:40 ஆக இருக்கும் நாட்களில் சில ஊர்களில் ஜும்ஆவின் பாங்கை  வழமைபோல் 12:30 சொல்கிறார்கள். பாங்கு சொல்லப்பட்ட உடன்           (12:40க்கு முன்பே) ஜும்ஆவின் முன் சுன்னத்தை மக்கள் தொழுக ஆரம்பித்து விடுகின்றனர். இது கூடுமா? விளக்கம் தேவை..           பதில்: உச்சி சாய்வதற்கு முன்         (நடு உச்சியில் இருக்கும்போது) லுஹரின் நேரமோ ஜும்ஆவின் நேரமோ ஆரம்பம் ஆகாது. பாங்கு என்பதே தொழுகையின் நேரம் வந்து விட்டதை தெரிவிப்பதற்கு தான்.எனவே சூரியன் உச்சி சாய்வதற்கு முன் பின் பாங்கு சொல்வது கூடாது. ஜவாலுக்கு முன்பாக பாங்கு கூறிவிட்டால், நேரம் வந்தபின் பாங்கை திரும்பக் கூறுவது அவசியம்.மேலும் சூரியன் உச்சி சாய்வதற்கு முன் உள்ள நேரம் மக்ரூஹான நேரமாக இருப்பதால் அந்நேரத்தில் சுன்னத் மற்றும் நபில் தொழுகை நிறைவேற்றுவது கூடாது.                  தத்தமது பகுதிகளில் உள்ள மதரசாக்களிலோ இதுபற்றி அறிந்த ஆலிம்ங்களிடமோ ஜவாலுக்கு உரிய நேரத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.                                                                                                                        📚பதாவா ரஹீமிய்யா7/307) .          

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20