பெண்கள் ஆடை
📖 *மஸாஇல் 📌 *பெண்கள் பேண்ட், ஷர்ட் அணிவது பற்றிய சட்டம்* *_கேள்வி :_* ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும்? ஒரு பெண் பேண்ட், ஷர்ட் அணியலாமா? _*பதில் :*_ பெண்கள் தளர்வான மற்றும் (உடல் அங்கங்களை) மறைக்கக் கூடிய ஆடைகளை அணிவது சுன்னத்தாகும், அங்கங்களை வெளிப்படுத்தக்கூடிய அல்லது இறுக்கமான ஆடைகளை அணிவது ஷரீஅத்தில் அனுமதிக்கப்படவில்லை. *பேண்ட், சட்டை அணிவது பெண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது,* ஏனெனில் ஒருபுறம் அது ஆண்களின் உடை என்பதாலும், மறுபுறம் உடல் அங்கங்களை மறைப்பதின் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதாலும் அதை பெண்கள் அணிவது தடுக்கப்பட்டுள்ளது. ( *مستفاد تكملة فتح الملهم : 76/4, 77* *كتاب اللباس والزينة،* *مطبوعة : دار إحياء التراث العربي، بيروت* ) *_பதில் எண்: 602936_* *ஃபத்வா எண் : 558-433/sn=7/1442* *தாருல் இஃப்தா,* *தாருல் உலூம் தேவ்பந்த்*