வெட்கம் وَلَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ இன்றைய நம்முடைய வாழ்வில் பார்வை பேச்சு நடை உடை பாவனைகள் அனைத்தும் வெட்க குணத்தை மீறிச் செல்கின்றன். தொலைக்காட்சி ,செல்போன், சமூக ஊடகங்கள் அனைத்திற்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது/ இன்றைய காலகட்டத்தில் வெட்கம்என்பது தேவையற்றதாகிவிட்டது. அது பத்தாம் பசலிகளின் குணம்என்றாகிட்ட்து. நாளுபேருக்கு முன்னாள் ஆபாசமாகஆடை அணிவதும். ஆபாசமாக நடந்துகொள்வதும் சுதந்திரமாககருதப்படுகிறது. பெண்களின் ஒரு மாநாடு நடை பெற்றபோது ஒரு பெண் மணி இப்படி ஒருபேனர் வைத்திருந்தார். Keep your laws and moralities out of my body உங்களது சட்டங்களையும்ஒழுக்கங்களையும் எனது உடலுக்குவெளியே வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் தாய தகப்பன்முன்னிலையில் காதலியுடன்சல்லாபத்தில் ஈடுபடுகிற மகன்களைப் பார்க்க முடியும். தொடக்கப்பள்ளிகளில் இரு...