இன்று குழந்தைகள் தினம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்...... அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!” என்று கேட்டார்கள். நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள் “1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான். 4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்...
Comments
Post a Comment