✍114.ஜும்ஆ தொழுகையை ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிறைவேற்றுவது கூடுமா ?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -114(ஷரீஅத் சட்டம் )15/03/20 ✍ஜும்ஆ தொழுகையை ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிறைவேற்றுவது கூடுமா ? பதில்:தகுந்த காரணமின்றி தத்தமது பகுதிகளில் உள்ள சிறிய சிறிய பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நடத்துவது ஷரீஅத்தின் அடிப்படை, இஸ்லாத்தின் மதிப்பு, அதன் நோக்கம் ஆகியவற்றுக்கு எதிரானதாகும். ஆனால் தகுந்த காரணம் ஏதும் இருந்தால் அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஜும்ஆ தொழுவதற்கு அனுமதி உண்டு. 📚பதாவா ரஹீமிய்யா 8/124) .
Comments
Post a Comment