✍117.நோன்பை விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டவர்கள் யார்?யார்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -117(ஷரீஅத் சட்டம் )18/03/20 ✍நோன்பை விட்டுவிட சலுகை அளிக்கப்பட்டவர்கள் யார்?யார்? பதில்: 1 .கஸ்ருடைய அளவு பயணம் செய்பவர் 2. கர்ப்பஸ்திரீகள் 3.குழந்தைக்கு பாலூட்டுபவள் 4.நோன்பு பிடிக்க இயலாத அளவு வயோதிகர் 5.கடும் நோய் உள்ளவர் ஆகிய நபர்களுக்கு நோன்பை விட்டு விடுவதற்கு சலுகை உள்ளது. இதில் வயோதிகர் மற்றும் கடும் நோய் உள்ளவர்கள் இனி எப்போதும் நோன்பு பிடிக்க சக்தி பெற மாட்டார்கள் என்றால்.. அவர் மீது களாவும் கடமையில்லை. எனினும் ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஃபித்யா என்னும் நஷ்ட ஈடு கொடுப்பது கடமை. இனிவரும் காலங்களில் நோன்பு பிடிக்க சக்தி பெறுவார் என்றால் களா செய்வது தான் கடமையாகும். ஃபித்யா கொடுப்பது போதுமாகாது. பயணம் செய்பவர், கர்ப்பஸ்திரீகள், பாலூட்டுபவள் சிரமம் மேற்கொண்டு நோன்பு வைத்தால் நோன்பு கூடிவிடும். அவர்கள் விட்டுவிடுவதற்கு சலுகை உள்ளது. அவர்கள் நோன்பை விட்டுவிட்டால் களா செய்வது கடமையாகும். மாதவிடாய், பிரசவ ரத்தப்போக்கு உள்ளவர்கள் நோன்பு பிடிப்பது ஹராமாகும். எனவே நோன்பை விட்டுவிட்டு பின்பு களா செய்வது வாஜிபாகும். தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment