⚖ தினம்ஒரு மஸ்அலா-03/06/20
✍183.நோயாளி பள்ளிக்கு வந்து அமர்ந்துகொண்டு ஜமாஅத்துடன் தொழுகிறார். இதன் சட்டம் என்ன? பதில்: நிற்க முடியாதவர் அமர்ந்துகொண்டு தொழுவது கூடும். நிற்க முடிந்தால் அப்போது அமர்ந்து தொழக்கூடாது. எந்த அளவுக்கு எனில் தக்பீர் தஹ்ரீமா சொல்லுமளவு தான் நிற்க முடியும் என்றாலும் கூட அதை நின்றுகொண்டு கூறி பிறகு உட்கார்ந்து கொள்ள வேண்டும். சில நோயாளிகள் சிறிது நேரம் நிற்க முடிந்தும் கூட அமர்ந்துகொண்டே தக்பீர் தஹ்ரீமா கூறுகிறார்கள். இது கூடாது. 📚ஃபதாவாரஹீமிய்யா
Comments
Post a Comment