⚖ தினம்ஒரு மஸ்அலா 08/06/20
✍188.உட்கார்ந்து தொழுதால் தரையில் சஜ்தா செய்ய முடியாது என்ற நிலையில் முன்னுள்ள கட்டையில் ஸஜ்தா செய்யலாமா? அல்லது தரையில் சஜ்தா செய்யாமல் அமர்ந்து தொழலாமா? இரண்டில் எது சிறந்தது? பதில்: நோயின் காரணமாக நின்று ருகூஃ சுஜூது செய்து தொழ முடியாமல் போய்விட்டால் அமர்ந்து தொழ வேண்டும். ருகூவு ஸஜ்தா விற்காக சைக்கினையாக குனிய வேண்டும். மேலும் ருகூவிற்காக குனிந்ததை விட சற்று அதிகமாக சஜ்தாவிற்கு குனிய வேண்டும். ஸஜ்தா செய்வதற்காக முஸல்லாவிற்கு முன்னால் தலையணை, கட்டை, பலகை போன்ற பொருட்களை வைத்து உயரமாக்கி அதன் மீது சஜ்தா செய்வது மக்ரூஹ் தஹ்ரீம் என்னும் ஹராமிற்கு நெருக்கமான அருவருக்கத்தக்க செயலாகும்.
Comments
Post a Comment