⚖ தினம்ஒருமஸ்அலா 06/05/20
✍186.முஅத்தினுக்கு காலில் வலி இருப்பதால் இருப்பின் போது வலது காலை விரித்து வைத்து அமர முடிவதில்லை. எனவே காலை பரப்பி வைத்து அமர்வதால் மற்ற தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இவர் தொழுவதற்கு சற்று விசாலமான இடம் தேவைப்படுவதால் இமாமுக்கு பின்னால் தனி முஸல்லா விரித்து தொழ விரும்புகிறார். அதனால் வரிசையில் நிற்பவர்கள் சேர்ந்து நிற்க முடியாது. ஆதலால் முஅத்தின் தனக்கென தனி முஸல்லா விரிப்பது கூடுமா? பதில்:காலை பரத்தி வைப்பதால் வரிசையில் இடையே இடைவெளி ஏற்படும் எனில் ஓரத்திலோ அல்லது கடைசி வரிசையில் நின்று கொள்ளவும். அங்கு நின்றாலும் இன்ஷா அல்லாஹ் அவருக்கு முதல் வரிசையில் நின்ற நன்மை கிடைத்துவிடும் . 📚ஃபதாவாரஹீமிய்யா 8/117
Comments
Post a Comment