⚖ தினம்ஒரு மஸ்அலா11/06/20

                   ‌                                                                        ‌                                                                      ✍192. நடக்க முடியாமல் படுக்கையில் கிடக்கும் நோயாளி உடலும், உடையும் சுத்தமில்லாத நிலையில் அந்த அசுத்த நிலையிலேயே விரிப்பின்மீது தொழலாமா?ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தம் செய்வது அவருக்கு சிரமம். சிலவேளைகளில் சிறுநீர் சுத்தம் செய்ய முடியாது. சுத்தம் செய்துவிடுபவரும் இல்லாமல் போய் விடுகிறார். இந்நிலையில் என்ன சட்டம்?                                         ‌  பதில்:உடல், உடை படுக்கையை சுத்தம் செய்ய முடியவில்லை என்றால்... அப்படிப்பட்ட நிலையிலும் தொழுது வர வேண்டும். தொழுகையை விடக்கூடாது.   இன்ஷாஅல்லாஹ்  தொழுகை நிறைவேறிவிடும். அதேபோல் சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்வதற்கு அவரது மறைவிடத்தை பார்ப்பது ஆகுமான எவரும் இல்லை எனில் அவ்வாறு சுத்தம் செய்வதும் மன்னிக்கப்பட்டு விடுகிறது. எனவே அதே நிலையில் தொழவேண்டும். களா செய்யக்கூடாது.                                                                                                                                                                                           📚 ரத்துல் முக்தார் 6/415                   ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20