⚖ தினம்ஒரு மஸ்அலா 04/06/20
✍184.நோயாளி ஃபர்ளு தொழுகையை எப்போது உட்கார்ந்து தொழலாம்? பதில்: தக்பீர் தஹ்ரீமா கூறி எந்த அளவு நேரம் நின்று ஓத முடியுமோ அந்த அளவு கண்டிப்பாக நின்று தொழ வேண்டும். அதற்கு இயலாதவர் அல்லது நின்றுகொண்டு தொழுதால் வியாதி அதிகமாகி விடும் என்ற பயம் உள்ளவர் உட்கார்ந்து தொழுவதற்கு அனுமதி உண்டு. தலையணையை வைத்தாவது ஏதேனும் ஒருவிதத்தில் உட்கார முடிந்தால் அப்போது படுத்துக் கொண்டு தொழ அனுமதி இல்லை. பர்ளு , வாஜிப் மற்றும் ஃபஜ்ரின் முன் சுன்னத்திற்கும் இதே சட்டம் தான் . 📚ஃபதாவாரஹீமிய்யா 3/56
Comments
Post a Comment