⚖227.தினம்ஒரு மஸ்அலா22/07/20
*31.குர்பானியின் சட்டம்* ✍விக்ரஹம் அல்லது சமாதியின் பெயரால் விடப்பட்ட பிராணியை அதன் உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கி குர்பானி செய்வது அல்லது அதன் இறைச்சியை விலைக்கு வாங்கி சாப்பிடுவது கூடுமா ? *பதில்:* விக்ரஹம் அல்லது சமாதியின் பெயரால் பிராணியை நேர்ந்து விடுவது ஹராமாகும். அவ்வாறு விடுவதால் உரிமையாளரின் உரிமையை விட்டும் நீங்காது. எனவே ஒருவர் அந்த பிராணியை உரிமையாளரிடம் இருந்து விலைக்கு வாங்கி குர்பானி கொடுத்தால் குர்பானி கூடும். அதன் இறைச்சியை கசாப்பு கடைக்காரர் விலைக்கு வாங்கி விற்பனை செய்தால் அப்போது அதனை விலைக்கு வாங்கி சாப்பிடுவதும் கூடும். 📚ரத்துல்முக்தார்6/179 *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment