குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது
இன்று குழந்தைகள் தினம்
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்......
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நாள் நான் நபியவர்களின் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன்.அப்போது நபியவர்கள் என்னைப் பார்த்து சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தரட்டுமா?! அல்லாஹ் அதன் மூலம் உனக்கு நற்பயனை வழங்குவான்!” என்று கேட்டார்கள்.
நான், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அவசியம் கற்றுத்தாருங்கள்! என்றேன். அப்போது மாநபி {ஸல்} அவர்கள் “1. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்). அவன் உன்னை பாதுகாப்பான். 2. அல்லாஹ்வை நீ பேணிக்கொள்! (பயந்து கொள்) உனக்கு முன்னால் அவனை நீ காண்பாய். 3. நீ ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் வாழும் காலத்தில் அல்லாஹ்வை நினைத்து வாழ்! உன்னுடைய கஷ்டமான காலத்தில் அல்லாஹ்வும் உன்னை நினைவில் வைத்திருப்பான்.
4. நீ ஏதாவது கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! 5. நீ உதவி தேடினால் அல்லாஹ்வைக் கொண்டே உதவி தேடு! ஏனெனில், எழுது கோள்கள் உயர்த்தப்பட்டுவிட்டன! எவைகள் எல்லாம் உண்டாக வேண்டும் என அவன் தீர்மானித்தானோ அவைகள் எல்லாம் உண்டாகி விட்டன.
6. அறிந்து கொள்! முழு மனித சமூகமும் ஒன்று சேர்ந்து உனக்கொரு நன்மையான காரியத்தை செய்ய நாடினாலும் அதனை அல்லாஹ் உனக்கு விதித்திருந்தால் தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது!
7. அவ்வாறு தான் முழு மனித சமூகமும் ஒன்றிணைந்து உனக்கொரு தீங்கை விளைவிக்க முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு அந்த தீமையை விதித்திருந்தாலே தவிர அவர்களால் அதனை செய்ய முடியாது.
8. அறிந்துகொள் சிறுவனே! நீ வெறுக்கின்ற பல காரியங்களில் பொறுமை மேற்கொண்டால் பல நல்ல விளைவுகளைக் காண்பாய்!
9. திண்ணமாக! அல்லாஹ்வின் உதவி என்பது பொறுமை கொள்வதில் தான் இருக்கின்றது!, திண்ணமாக, மகிழ்ச்சி என்பது சிரமத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது! திண்ணமாக, இலகு என்பது கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வதில் தான் இருக்கின்றது!” என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
இது சிறுவராயிருந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கற்றுத்தந்த அடிப்படை மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த உம்மத்துக்கும் தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
Comments
Post a Comment