⚖214. தினம்ஒரு மஸ்அலா09/07/20
*18.குர்பானியின் சட்டம்* ✍ லாக் டவ்ன் அறிவிக்கப்பட்டுள்ள இச்சூழலில் கால் நடை சந்தைகள் இயங்கவில்லை, மேலும் கிராம வாசிகள் நோய்தொற்றை பயந்து தங்களது கிராமத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. எங்களுடைய ராய்சூடி கிராமம், மேலும் தெலுங்கானா,கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் மக்கள் நோய்தொற்றை பயந்து தங்களது கிராம எல்லைகளை அடைத்து வைத்துள்ளனர். யாரையும் உள்ளே விடுவதில்லை. வெளியேறவும் அனுமதிப்பதில்லை, மேலும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குர்பானீ கொடுக்க அனுமதிப்பதில்லை. இச்சூழலில் குர்பானீ நாட்கள் வந்து விட்டால் வெளிப்படையாக குர்பானீ கொடுக்க முடியாத சூழல் ஏற்படலாம், மறைவாக குர்பானீ கொடுத்தாலும் போலீசார் அவர்களுடைய குர்பானீ பிராணிகளோடு அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே ஒருவேளை குர்பானீயினுடைய நாட்கள் முழுவதும் குர்பானீ கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் குர்பானீ தொகையை தர்மம் செய்து விடுவது கூடுமா?
பதில் : குர்பானீயை பொருத்த வகையில் அதற்கு பகரம் கிடையாது. எனவே குர்பானீ நாட்களில் கடமையானவர்கள் குர்பானீ கொடுப்பது கட்டாயமாகும். அதேசமயம் குர்பானீ என்பது பொருள் சார்ந்த வணக்கமாக இருப்பதால் இதில் மற்றவருக்கு பொறுப்பு கொடுப்பது கூடும். நம் இருப்பிடத்தில் நம்மால் கொடுக்க முடியாத சூழலிருந்தால் எங்கே குர்பானீ கொடுக்க தடையில்லையோ அங்கே உள்ள ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து குர்பானீயை நிறைவேற்றலாம். குர்பானீயின் நாட்கள் முழுவதும் அங்கேயும் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அத்தொகையை மதரஸாக்களுக்கோ, அல்லது தேவையுள்ள ஏழை எளியோருக்கோ தர்மம் செய்து விட வேண்டும். 📚 fatawa Darul Uloom Deoband *தொகுப்பு* மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment