⚖213.தினம்ஒரு மஸ்அலா08/07/20
*17.குர்பானியின் சட்டம்* ✍ மக்கள் உயர்தரமான நல்ல பிராணிகளை தேர்ந்தெடுத்து குர்பானீ கொடுப்பார்கள் அது விலை அதிகமாக உள்ளது என்றில்லாமல் நடுத்தரமான குர்பானீ பிராணியை குர்பானீ கொடுத்து விட்டு எஞ்சிய தொகையை மதரஸாக்கள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு கொடுப்பதன் மார்க்க சட்டம் என்ன?
*பதில்* : குர்பானீ விஷயத்தில் தரமான பிராணிகளை கொடுப்பது தான் முறை. இருப்பினும் நடுத்தரமான பிராணியை குர்பானீ கொடுத்து விட்டு சூழலை அனுசரித்து எஞ்சியுள்ள தொகையை மதரஸாக்களுக்கோ, தேவையுள்ளவர்களுக்கோ, கொடுப்பது தவறல்ல. அது நன்மைக்குரியது தான்.
மேலும் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வது என்ற வகையில் சிறந்ததாகும். 📚ரத்துல்முக்தார் *தொகுப்பு*. மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment