⚖212. தினம்ஒரு மஸ்அலா07/07/20
*16.குர்பானியின் சட்டம்* ✍யாரின் மீது குர்பானீ கடமையோ அவர் கடமையான குர்பானியை மட்டும் கொடுத்து விட்டு கடந்த காலங்களில் கொடுத்து வந்த நஃபிலான (உபரியான ) குர்பானிகளை தவிர்த்து தேவையுள்ளவர்களுக்கு அதை தர்மம் செய்வதன் மார்க்கச் சட்டமென்ன?
*பதில்* : வியாபாரம் தொழில் துறைகளில் மக்கள் நலிவடைந்துள்ள தற்போதைய சூழலில் கடமையான குர்பானியை நிறைவேற்றி விட்டு உபரியாக நாம் செய்து வந்த குர்பானிகளுக்கு பகரமாக தேவையுள்ளவர்கள், ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்வது சாலச்சிறந்தது. கடமையான குர்பானீ செய்தாக வேண்டும். உபரியான வணக்கங்களில் தேவையுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் செலவு செய்வதே மார்க்க நடைமுறையாக இருப்பதால் அதை பின்பற்றி அத்தொகையை தர்மம் செய்ய வேண்டும். அதை குர்பானீ நாட்களுக்கு முன்போ அதற்கு பின்னரோ தேவையை அனுசரித்து கொடுக்கலாம்.
📚 *தொகுப்பு* மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம். .
Comments
Post a Comment