⚖211.தினம்ஒரு மஸ்அலா06/07/20

               ‌ *15.குர்பானியின் சட்டம்*                                                                       ‌                                                                                      ✍நிறைய இடங்களில் மக்கள் தங்களது குர்பானீயின் பொறுப்புகளை மதரஸாவின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து கொடுக்கச் செய்கிறார்கள். அவர்கள் குர்பானீ கொடுக்க முடியாத போது மதரஸாவில் உள்ளவர்கள் எங்கே சாத்தியமாகுமோ அப்படிப்பட்ட வேறு பகுதிகளில் கொடுக்கச் செய்கிறோம் என்று கூறி அத்தொகையை பெற்றுக் கொள்கிறார்கள். அங்கும் கொடுக்க முடியாத போது அத்தொகையை மதரஸாவின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் இதன் சட்டமென்ன?

 *பதில் :*  தெளிவாக எங்களால் கொடுக்க முடியாத போது வேறிடத்தில் கொடுக்கச் செய்கிறோம் அதுவும் முடியாத போது அத்தொகையை மதரஸாவின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என்று கூறி  வாங்குவது சரியானது தான். ஏனெனில் ஒருவரை தனது குர்பானீயை நிறைவேற்றிட வகீலாக நியமிக்கலாம் மேலும் (مؤكل) பொறுப்பு கொடுத்தவரின் அனுமதி பெற்று அந்த பொறுப்பேற்ற நபர் வேறெருவரை (وكيل) பொறுப்பாளராக நியமிப்பது கூடும். என்கினும் பொறுப்பு கொடுத்தவரின் அனுமதியின்றி பிரிதொருவரை குர்பானீயை நிறைவேற்ற பொறுப்பாளராக நியமித்தல் கூடாது. 
எனவே அவர்களின் அனுமதியோடு மதரஸாவின் நிர்வாகிகள் வேறொருவரின் மூலம் குர்பானீயை நிறைவேற்றுவதும், அவ்வாறும் நிறைவேற்ற முடியாத போது மதரஸாவின் தர்ம செலவினங்களில் அத்தொகையை பயன்படுத்திக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே.                                      ‌                                            📚 ஃபதாவா தாருல் உலூம் தேவ்பந்த்                    ‌              *தொகுப்பு*.             மௌலவி ஹாஃபிழ் S.அமானுல்லாஹ் அன்சாரி ஒட்டன்சத்திரம்.                    ‌.                                                  ‌

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20