✍168. கடனாளி அல்லது பெரிய குடும்பத்தாருக்கு நிஸாபை விட அதிகமாக ஜகாத் கொடுக்கலாமா?
⚖ *தினம் ஒரு மஸ்அலா* (ஷரீஅத் சட்டம்)08/05/20 ✍168. கடனாளி அல்லது பெரிய குடும்பத்தாருக்கு நிஸாபை விட அதிகமாக ஜகாத் கொடுக்கலாமா? *பதில்* :ஏழை செல்வந்தர் ஆகும் அளவுக்கு ஜகாத் கொடுப்பது மக்ரூஹ் ஆகும். ஆனால் அவர் கடனாளியாகவோ; பெரும் குடும்பஸ்தர் ஆகவோ இருந்தால் அவருக்கு கடனை அடைத்தது போக மீதமுள்ள பணம் நிஸாபின் அளவுக்கு இல்லாத விதத்தில் மேலும் பெரிய குடும்பத்திற்கு அவர் தனது குடும்பத்தினருக்கு ஜகாத் பணத்தை பிரித்துக் கொடுத்தால் யாருக்கும் நிஸாபின் அளவு வராத விதத்தில் அவர்களுக்கு நிஸாபவை விட அதிகமாக ஸகாத் கொடுப்பது மட்டுமின்றி கூடும் . 📚ஃபதாவாரஹீமிய்யா 5/1156 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment