✍ தராவீஹில் சில ஹாஃபிழ்கள் வேகமாக ஓதுவதால் எழுத்துக்களை சரியாக வெளிப்படுத்துவது இல்லை. இவ்வாறு வேகமாக ஓதுவது கூடுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -154. (ஷரீஅத் சட்டம்)24/04/20 ✍ தராவீஹில் சில ஹாஃபிழ்கள் வேகமாக ஓதுவதால் எழுத்துக்களை சரியாக வெளிப்படுத்துவது இல்லை. இவ்வாறு வேகமாக ஓதுவது கூடுமா? *பதில்* :எந்த இமாம் பக்கத்திலுள்ள முக்ததிகள் கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வேகமாக ஓதுகின்றாரோ அவர் அறவே ஓதாதவர் போன்றவராவார். எனவே இமாம் சரியான உச்சரிப்பில் எழுத்துக்களை அதன் வெளியாகும் இடத்திலிருந்து வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 7/301 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment