159.(B F)பிராவிடண்ட் பண்ட் பணத்துக்கு ஸகாத் கடமையா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -159. (ஷரீஅத் சட்டம்)29/04/20 ✍ அரசாங்கம் எனது சம்பளத்திலிருந்து பி எஃப் பிராவிடண்ட் பண்ட் மாதம் மாதம் 90 ரூபாய் கட்டாயமாக பிடித்துக் கொள்கிறது. நான் மேலும் 41 ரூபாய் சேமித்து வைக்கும் படி எழுதியுள்ளேன். இப்போது மீதியுள்ள பணம் ரிடையர் ஆவதற்கு முன்பு கிடைக்காது. எனவே இந்த 41 ரூபாய் பணத்துக்கு உடனடியாக ஸகாத் கொடுப்பது அவசியமா? *பதில்* : பிராவிடண்ட் பண்ட் பணம் 90 ரூபாய்க்கு உடனடியாக ஜகாத்து இல்லை. 41 ரூபாய்க்கு இப்போது ஜகாத் கொடுப்பது கடமையாகும். 📚ஃபதாவாரஹீமிய்யா 5/147 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment