✍151. தராவீஹின் இரண்டாவது ரக்அத்தில் உட்கார மறந்து விட்டால் அதன் சட்டம் என்ன?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -151. (ஷரீஅத் சட்டம்)21/04/20 ✍ தராவீஹின் இரண்டாவது ரக்அத்தில் உட்கார மறந்து விட்டால் அதன் சட்டம் என்ன? *பதில்* :தராவீஹின் இரண்டாவது ரக்அத்தின் இருப்பில் உட்கார மறந்து எழுந்து விட்டால் மூன்றாவது ரக்அத்திற்காக எதுவரை சஜ்தா செய்யவில்லையோ அதுவரை உட்கார்ந்து கொள்ளலாம். சஜ்தா சஹ்வு செய்து விட்டால் தொழுகை நிறைவேறிவிடும். மூன்றாவது ரக்அத்தின் சஜ்தா செய்து விட்டால் அப்போது நான்காவது ரகஅத்தையும் தொழுது சஜ்தா சஹ்வு செய்து தொழுகையை முடிக்கவேண்டும். ஆனால் இந்த நான்கு ரக்அத்துகளை இரண்டு ரக்அத்துக்கள் ஆகவே கணிக்க வேண்டும். . 📚ஃபதாவாரஹீமிய்யா 1/351 தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment