✍143.இரவில் ஒருவர் நிய்யத்து வைக்கவில்லை. அவர் கண் விழித்து பார்க்கும்போது சூரியன் உதயமாகி விட்டது எனில்...
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -143(ஷரீஅத் சட்டம் )13/04/20 ✍ இரவில் ஒருவர் நிய்யத்து வைக்கவில்லை. அவர் கண் விழித்து பார்க்கும்போது சூரியன் உதயமாகி விட்டது எனில்... அவர் எப்படி நோன்பின் நிய்யத்தை வைப்பார்? *பதில்* : ஹனஃபி மத்ஹபின் படி ஒருவர் ஒரு சுப்ஹுசாதிக்கு பின்பு நோன்பை முறிக்கும் காரியங்கள் எதுவும் செய்யாமல் இருப்பின் அவர் நண்பகளுக்கு சற்று ஏறக்குறைய 40 நிமிடங்களுக்கு முன்பு வரை நோன்பு இருப்பதாக நிய்யத் செய்தால் நோன்பு கூடி விடும். எனவே கேள்வியில் கண்டவர் நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடாமல் நோன்பு நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இச்சட்டம் ரமலானின் ஃபர்ளான நோன்பிற்கும், நஃபிலான நோன்பிற்கும் பொதுவானதாகும். களாவான நோன்பில் சுபுஹு சாதிகிற்கு முன்பே நிய்யத்து வைப்பது அவசியமாகும். *நூல்: ஆப்கே மஸாயில்* தொகுப்பு: *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment