142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா?

தினம் ஒரு மஸ்அலா -12/04/20    142.சஹர் சாப்பிடாமல் நோன்பு வைக்கலாமா?                                      பதில் :                                                        நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹர் செய்வதை ஆர்வமூட்டி கூறியுள்ளார்கள் . "ஸஹர்செய்யுங்கள்"! ஏனெனில் ஸஹர் உணவு பரக்கத் ஆனது( நூல் புகாரி)என்றும் ,ஒரு மிடறு தண்ணீர் குடித்தாவது ஸஹர் செய்யுங்கள்.     (நூல் :இப்னு ஹிப்பான்)என்றும் கூறியுள்ளார்கள்.                                                                 மேலும் நமது இஸ்லாமியர்களின் நோன்பிற்கும், யூத கிறிஸ்தவர்களின் நோன்பிற்கும் மத்தியில் பிரிவினை ஏற்படுத்த கூடியது ஸஹர் தான்.    (நூல்:முஸ்லிம் )என்றும் கூறி அதனை வலியுறுத்தியுள்ளார்கள்.                      எனவே முடிந்த அளவு அதனை தப்பவிடக் கூடாது. என்றாலும் ஏதேனும் சந்தர்ப்பத்தினால் கண்ணயர்ந்து விடுவது போன்ற காரணத்தால் ஸஹர் செய்ய முடியாமல் போய் விட்டாலும் நிய்யத் வைத்து விட்டால் நோன்பு கூடிவிடும்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20