✍141.எந்த நேரத்தில் ஸஹர் சாப்பிடுவது சிறந்தது. பஜ்ரு பாங்கு வரை சாப்பிடலாமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -141(ஷரீஅத் சட்டம் )11/04/20              ✍ எந்த நேரத்தில் ஸஹர் சாப்பிடுவது சிறந்தது. பஜ்ரு பாங்கு வரை சாப்பிடலாமா?                        பதில்:                                                   இஃப்தாரை துரிதப்படுத்தியும் ஸஹரை பிற்படுத்தி இருக்கும் காலமெல்லாம் என் உம்மத்து  நலவின் மீது இருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  *நூல்:அஹ்மது*                                                              எனவே நோன்பில் சந்தேகம் ஏற்பட்டு விடாத அளவிற்கு  ஸஹரை அதன் முடிவுக்கு நெருக்கமான நேரங்களில் செய்வது சிறப்பு.                                                          நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹர் செய்து சுமார் ஐம்பது ஆயத்துக்கள் ஓதும் நேரத்திற்கு பின் பாங்கு சொல்லப்படும்.                                     (நூல் :புகாரி) என்று ஹதீஸில் வருவதால் சுமார் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்னதாக ஸஹரை முடித்துக் கொள்வது விரும்பத்தக்கதாகும்.                                                                                                                                தொகுப்பு:                  *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா        S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20