✍139.வாயிலிருந்து உடலின் பிற பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் அல்லது காரல் எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியுமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -139(ஷரீஅத் சட்டம் )09/04/20 ✍ வாயிலிருந்து உடலின் பிற பகுதிகளில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் அல்லது காரல் எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியுமா? பதில்: வாய் மற்றும் உடலின் பிற பகுதிகளில் இருந்து இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. காரல் வாய்க்குள்ளாகவே இருந்து உள்ளே சென்று விட்டால் நோன்பு முறியாது. 📚ஆலம்கிரி 1/278 ரத்தம் வாயிலிருந்து வந்து எச்சிலுடன் கலந்து இருக்க அந்த எச்சிலை விழுங்கினால் நோன்பு முறிந்துவிடும். எனினும் ரத்தம் எச்சிலை விட குறைவாக இருப்பின் ரத்தத்தின் சுவை தொண்டையில் உணரப்படாத அளவு இருப்பின் நோன்பு முறியாது. 📚 ஆப்கே மஸாயில் . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment