✍135. ரமலான் காலங்களில் வீடுகளில் ஊது பத்தி, சாம்பிராணி புகை போடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே என்ன சட்டம்?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -135(ஷரீஅத் சட்டம் )05/04/20 ✍ ரமலான் காலங்களில் வீடுகளில் ஊது பத்தி, சாம்பிராணி புகை போடக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே என்ன சட்டம்? பதில்:புகை, தூசி போன்றவை ஒருவர் வேண்டுமென்றே மூக்கினால் அல்லது வாயினால் உள்ளே இழுத்தால் அதுக்கப்புறம் நோன்பு முறிந்து விடும் என்பதால் அப்படி கூறுவது சரிதான். அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். (மஸாயில் ரோஜா ) ஆனால் வெளியே செல்லும் ஒருவர் அங்குள்ள புகை மூட்டத்தின் காரணமாக தவிர்க்க முடியாமல் சுவாசித்து விட்டால் வாய் வழியாக உள்ளே இழுத்துக் கொண்டால் அப்போது முடியாது. 📚பதாவா ரஹீமிய்யா 8/266) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment