✍134.இளைப்பு நோய் உடையவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பின் இடையில் இளைப்பு அதிகமானால் இன்ஹேலர் உபயோகப்படுத்தலாமா?
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -134(ஷரீஅத் சட்டம் )04/04/20 ✍இளைப்பு நோய் உடையவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பின் இடையில் இளைப்பு அதிகமானால் இன்ஹேலர் உபயோகப்படுத்தலாமா? கூடாது எனில் இவர்கள் எவ்வாறு நோன்பு வைப்பது ? பதில்: இளைப்பு நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் மூலம் மூக்கு, வாய் வழியாக மருந்து செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும். எனவே அவர் மருத்துவர்களிடம் நோன்பின் சமயத்தில் இவ்வாறு மருந்து செலுத்துதல் அன்றி இன்ஜக்ஷன் போன்ற வேறு முறையைக் கையாள ஆலோசனை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும். வேறு எந்த முறையும் இல்லை எனில் இளைப்பை சமாளிக்க முடியாது எனில் இத்தகைய நோயாளி நோன்பை முறித்து பின்னர் களா செய்து கொள்ள வேண்டும். அவருக்கு நோய் நிவாரணம் ஆகாமல் தொடர்ந்து இருந்து களா செய்ய சாத்தியம் இல்லாதவராக இருந்தால் அவர் அந்த நோன்பு களுக்காக பித்யா நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment