⚖ **தினம் ஒரு மஸ்அலா* -25(ஷரீஅத் சட்டம் )15 -12-19.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -25(ஷரீஅத் சட்டம் )15 -12-19. ✍ மரணத்தின் இத்தா எப்போது இருந்து ஆரம்பமாகும்? எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? சந்திர கணக்குப்படி அதை கணக்கிட வேண்டுமா? அல்லது நாட்களை கவனித்தா? பதில்: கணவர் இறந்த நேரத்திலிருந்து ஆரம்பமாகி விடும். கர்ப்பம் ஏற்படவில்லை எனில் மனைவி நான்கு மாதங்கள் பத்து நாட்களும் கர்ப்பம் ஏற்பட்டு இருந்தால் குழந்தை பிறக்கும் வரையிலும் இத்தா இருக்க வேண்டும் . சந்திர மாதத்தின் முதல் நாளில் கணவர் இறந்து இருந்தால் அப்போது சந்திர ஆண்டின் கணக்குப்படி நான்கு மாதங்கள் பத்து நாட்களும்,இடையில் இறந்திருந்தால் ஒவ்வொரு மாதமும் 30 நாட்கள் வீதம் கணக்கிட்டு 4 மாதங்கள் 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். 📚பதாவா ரஹீமிய்யா 8/434) .
Comments
Post a Comment