⚖ **தினம் ஒரு மஸ்அலா* -22(ஷரீஅத் சட்டம் )12 -12-19.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -22(ஷரீஅத் சட்டம் )12 -12-19. ✍ *வங்கி சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை வீட்டின் கழிவறையும் இன்சூரன்சு வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவோ செலுத்தலாமா* ?* பதில்: வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகை கண்டிப்பாக ஹராமாகும் . அதனை தானும் பயன்படுத்தக்கூடாது. தனக்கு பயன் ஏற்படும் காரியங்களிலும் பயன்படுத்தக்கூடாது. 1.வங்கியிலிருந்து வட்டி தொகையை பெற்று அதனை அல்லாஹ் தன்னை இந்த (வட்டி) தீங்கிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து விட வேண்டும் . இதுவே மிக நல்லது. 2. அரசு வங்கியிலிருந்து பெறப்பட்ட வட்டி தொகையை அரசாங்கம் முறையற்ற வகையில் விதிக்கும் வரிக்கும் மற்றும் எந்த வங்கியில் இருந்து வட்டிபெற்றொமோ அதே வங்கிக்கும் செலுத்தப்படும் வட்டிக்கும் அத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 3. கழிவறை மற்றும் வாகன இன்சூரன்ஸ் களின் பலன் நமக்கு வருவதாலும் மேலும் செல்வந்தர்களுக்கும் பலன் ஏற்படுகின்றது என்பதாலும் அதில் வட்டித் தொகையை பயன்படுத்தக்கூடாது. 📚ரத்துல் முக்தார் 182/6) . தொகுப்பு : *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment