⚖ **தினம் ஒரு மஸ்அலா* -17(ஷரீஅத் சட்டம் )07 -12-19.

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -17(ஷரீஅத் சட்டம் )07 -12-19.                                     ✍ * *கட்கத்தின் முடியையும், தொப்புளுக்கு கீழ் உள்ள முடிகளையும் எத்தனை நாளைக்கு ஒருமுறை எடுக்க வேண்டும்?*          பதில்;வாரத்திற்கு ஒரு முறை கட்கத்தின் முடியையும், தொப்புளுக்கு கீழ் உள்ள முடிகளையும் களைவது சிறப்பாகும். இல்லை எனில் 15 நாட்களுக்கு ஒருமுறை களையலாம். 40 நாட்களுக்கு முடிகளைக் கலையாமல் இருப்பது மக்ரூஹ்ஆகும்.                                        📚ஃபதாவா மஹ்மூதிய்யா  19/449) .                                                                                     _ஹழ்ரத் அனஸ் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்: மீசையைக் கத்தரிப்பது, நகம் வெட்டுவது ,கட்க முடியை பிடுங்குவது, மர்மஸ்தான முடியைச் சிரைப்பது ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு விடக்கூடாது என எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரம்_ குறித்தார்கள் .              (நூல் -முஸ்லிம் )      தொகுப்பு :            *மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20