⚖ **தினம் ஒரு மஸ்அலா* -14.
⚖ **தினம் ஒரு மஸ்அலா* -14. (ஷரீஅத் சட்டம் ) 04-12-19. ✍ *முஸ்லிம் சகோதரர்கள் எழுதத் துவங்கும் முன் 786 எழுதுவதின் விளக்கம் என்ன? இதற்கு ஆதாரம் உண்டா ?* பதில் : 786 என்பது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதின் அப்ஜத் கணக்கின்படி கூட்டு தொகையாகும்.சிலர் கடிதம் போன்றவற்றில் பிஸ்மில்லாஹ் எழுதினால் அதை தூக்கிப் போடுவது காலில் மிதி படுவது போன்ற செயல்களால் கண்ணியக் குறைவு ஏற்பட்டு விடலாம் என அஞ்சி இவ்வாறு 786 என எழுதுகின்றனர். ஆனால் மார்க்க விற்பன்னர்கள் இவ்வாறு செய்வதை குர்ஆன் ஆயத்தின் விஷயத்தில் செய்யும் தஹ்ரீஃப்- முறைகேடு என கூறியுள்ளனர். எனவே இவ்வாறு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். பிஸ்மில்லாஹ் அவை முழுவதும் எழுதினால் காகிதம் காலில் மிதிபட்டு கண்ணியக் குறைவு ஏற்படும் என அஞ்சினால் முழுவதும் எழுதாமல் "பிஸ்மிஹிதஆலா" என்பதாக எழுதிக் கொள்ளலாம் . 📚ஃபதாவா மஹ்மூதிய்யா3/340) தொகுப்பு : மௌலவி ஹாஃபிழ் S. அமானுல்லாஹ் அன்சாரி_* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.
Comments
Post a Comment